அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள ரகசிய ‘ஏவுகணை நகரத்தின்’ வீடியோவை வெளியிட்டு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
மலைகளுக்கு அடியில் குடையப்பட்ட பிரம்மாண்ட சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள், அதிநவீன காமிகேஸ் டிரோன்கள் (தற்கொலைப்படை டிரோன்கள்), கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் கடல் கண்ணிவெடிகள் எனப் போர் தளவாடங்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
Iran published footage of underground tunnels stocked with naval drones, anti-ship missiles, and sea mines. Reuters reported, citing US officials, that Iran has mined the Strait of Hormuz with dozens of sea mines. #Iran pic.twitter.com/Kcwp5UqkXq
— NOELREPORTS 🇪🇺 🇺🇦 (@NOELreports) March 11, 2026
எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும், அங்கிருந்தே நேரடியாகத் தாக்குதல் நடத்தவும் வசதியாக இந்த நிலத்தடி தளம் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்பதைக் காட்டும் வகையில் ஈரான் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, சர்வதேச ராணுவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
