சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில், ஈரான் அரசு ஒரு அதிரடித் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் அந்த வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி வழங்க ஈரான் ஒரு புதிய நிபந்தனையை விதிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, இனிமேல் கச்சா எண்ணெய் பரிவர்த்தனைகள் அமெரிக்க டாலருக்குப் பதிலாகச் ‘சீன யுவான்’ (Yuan) மதிப்பிலேயே நடைபெற வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் எடுத்துள்ள இந்த முயற்சி, உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால், அந்நாட்டின் எண்ணெய் நிலையங்கள் மீதே நேரடியாகத் தாக்குதல் நடத்தப்படும்” எனப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வல்லரசு நாடுகளுக்கு இடையேயான இந்தப் பனிப்போர், தற்போது கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
