தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “விவசாயிகளின் ஒட்டுமொத்த கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள் குறித்து முதலமைச்சர் கூடிய விரைவில் மிகச் சிறந்த திட்டங்களை அறிவிப்பார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், நேற்று திருவண்ணாமலை மேல்மா பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைத் தவெக தரப்பில் நேரில் சந்தித்து, அதிகாலை முதலே அவர்களின் நீண்ட காலப் பிரச்சனைகளைத் தனிப்பட்ட முறையில் கேட்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகள் சந்தித்து வரும் இவை அனைத்தும் 10, 15 வருட காலப் பிரச்சனைகள்” என்று சுட்டிக்காட்டினார். இவற்றை முழுமையாகச் சரிசெய்ய முதலமைச்சரும், அனைத்து அமைச்சர்களும் தினமும் 15 முதல் 18 மணி நேரம் வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து கள ஆய்விலேயே இருந்து உழைத்து வருகிறார்கள் என்றும், கூடிய விரைவில் விவசாயிகளின் அனைத்துப் பிரச்சனைகளும் முழுமையாகச் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.