சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், 10 வயது சிறுமியைப் பெண் சிங்கம் ஒன்று திடீரெனத் தாக்கிய சம்பவம் உலகையே அதிர வைத்துள்ளது.
பூங்காவைப் பார்வையிட வந்த அந்தச் சிறுமி, எதிர்பாராத விதமாகச் சிங்கத்தின் எல்லைக்குள் சிக்கியபோது, ஆக்ரோஷமடைந்த பெண் சிங்கம் அவரைப் பாய்ந்து கவ்விப் பிடித்தது.
10-year-old girl attacked by lions at the Shantou Zhongshan Park Zoo in Guangdong, China.
According to zoo workers, the lioness attacked because the girl had meat in her hand.
The girl was in an interactive animal-feeding area, but according to zoo officials, she should not… pic.twitter.com/m8mxF4ATW0
— Collin Rugg (@CollinRugg) March 13, 2026
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் துணிச்சலுடன் செயல்பட்டுச் சிறுமியைச் சிங்கத்தின் பிடியிலிருந்து மீட்கப் போராடினர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுமி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த நடுக்கம் ஊட்டும் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், உயிரியல் பூங்காக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
