பூதமீனாக (Blob Fish) அழைக்கப்படும் பிளாப் மீன், அதன் வியப்பூட்டும் தோற்றத்தால் உலகின் மிகவும் அவலட்சணமான மீனாகப் பொதுவாக கருதப்படுகிறது. இந்த மீனை, நியூசிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பொன்று நடத்திய வாக்கெடுப்பில் மக்கள் அதிக வாக்குகள் அளித்ததன் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான ‘நியூசிலாந்தின் ஆண்டு மீன்’ (Fish of the Year) பட்டத்தை வென்றுள்ளது. மக்கள் கவனத்தை கடலின் ஆழப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பில் செலுத்த வைப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பிளாப் மீன் பெரும்பாலும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் ஆழமான கடல் பகுதிகளில், 2,000 முதல் 4,000 அடி ஆழத்தில் வாழ்கின்றது. வழுவழுப்பான உடலமைப்புடன், ஒரு அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், மற்ற மீன்களைப் போல விரைவாக நீந்த முடியாது. மனிதர்கள் உண்பதற்கு இது உகந்ததல்ல என்றும், இது போன்ற அரிய இனங்களை பாதுகாப்பது கடல்சூழல் சமநிலையை காக்க உதவும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
