அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜீனியா மாநிலத்தில் நூலகத்தில் நடைபெற்ற ஒரு திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயதான அமி பாரன் மற்றும் அவரது கணவர் ஹண்டர், ஜனவரியில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தின் விசேஷம் என்னவெனில், அவர்கள் பாரம்பரிய திருமண ஆடைகளை அணியாமல், ஜீன்ஸ் மற்றும் செக்கடை ஷர்ட்டில் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து திருமண மேடையை பகிர்ந்தனர். வெறும் $1,000 (சுமார் ரூ.83,000) செலவில் இந்த திருமணத்தை முடித்துவிட்டனர்.

திருமண செலவில் $300 கௌபாய் பூட்ஸ் வாங்கவும், $480 புகைப்படக் கலைஞரை ஒப்பந்தம் செய்யவும் பயன்படுத்தியுள்ளனர். தனது முடி மற்றும் மேக்கப்பை அவரே செய்துகொண்டு, இசை மற்றும் உணவிற்கான ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் செய்துள்ளார். பின்னர், “என் வாழ்க்கையின் சிறந்த நாள்” எனக் கூறி அந்த திருமணத்தின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். மேலும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இது பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.