தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் இயங்கி வந்த மதுக்கடைகளை ஒழுங்குபடுத்தும் அதிரடி நடவடிக்கையாக, முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருந்த 717 டாஸ்மாக் கடைகளும் தற்போது முழுமையாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த மதுக்கடைகள் என அடையாளம் காணப்பட்டு அவை ஒவ்வொன்றாக அதிரடியாக மூடப்பட்டன.
அந்த வகையில், புதிய அரசின் இந்த அதிரடி ஆக்ஷன் திட்டத்தின் கீழ் தற்போது மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளும் முழுமையாகப் பூட்டப்பட்டு தங்களின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன.
இந்த மிக முக்கிய அறிவிப்பு, குறிப்பாகப் பெண்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, புதிய முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு சமூக வலைத்தளங்களிலும் தற்போதைய பேசுபொருளாக செம வைரலாகி வருகிறது.
