டெல்லியில் வருகிற ஜூன் மாதம் 8-ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. பாஜகவுக்கு எதிராக தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்தது. அதாவது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியதால் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்த நிலையில் அதே நேரம் இந்தியா கூட்டணிக்கு தங்களால் எந்த பாதிப்பு வராது என்று தெளிவு படுத்தியது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி எந்த நிலையிலும் சிதறி விடக்கூடாது என்றும் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்றும் தற்போது திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் என அறிவித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
