பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ‘ஆபரேஷன் ஹெரோப்-2’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகப் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) நடத்தி வரும் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்த ஹாவா பலோச் என்ற பெண் தற்கொலைப்படை போராளி, தாக்குதலுக்கு முன்னதாகப் புன்னகையுடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் நவீன ரகத் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் அவர், “இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள், துணிச்சலற்ற பாகிஸ்தான் ராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்கத் தயார்” எனக் கூறி, மற்ற பலுச் பெண்களையும் போராட்டத்தில் இணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

“>

 

சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலில், பல ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இறுதியில் ஹாவா பலோச் உயிரிழந்த நிலையில் இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.