தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தேர்தலை முன்னிட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சிக்கு சென்றிருந்த நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோ மேற்கொண்டு வருகிறார். அந்த அந்த வகையில் திருவள்ளூர் பகுதிக்கு வந்தபோது காரில் இருந்து பிரச்சார வாகனத்திற்கு மாறிய விஜய் சென்னை பூந்தமல்லி வழியாக மிகவும் உற்சாகமாக சென்றார்.

 

அவரை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் புதுமண தம்பதி ஒன்று திருமணம் முடிந்த நிலையில் அப்படியே மனக்கோலத்தில் விஜயை பார்க்க ஆர்வத்துடன் வந்து நின்றனர். இதனை கவனித்த விஜய் உடனடியாக அவரை தன்னுடைய பிரச்சார வாகனத்திற்கு அழைத்தார். அந்த புதுமண ஜோடி விஜயை பார்த்த உற்சாகத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் விஜய்யும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் புது பெண் விசில் அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.