புதுச்சேரியில் 2024-25 கல்வியாண்டு முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண்  இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.