இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் (NEET – UG) தேர்வு வருகின்ற மே மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இந்த இடையில் விண்ணப்பதாரர்கள் புகைப்படங்களை இன்று மாற்றிக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும்.