ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை தொடர்ந்து  இதுகுறித்த ஆய்வுக்கான மாதிரிகளை சேகரித்து வருவதாக FSSAI தெரிவித்துள்ளது. செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய  தேசிய அளவில் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.