புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, மழைக்கால நிவாரணம் 3000 லிருந்து 8000 ரூபாயாக உயர்த்தப்படும்.

காரைக்காலில் உள்ள தலைமை பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.