தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (டிசம்பர் 9) காலை 10.30 மணிக்கு உப்பளம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, அங்குப் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, உப்பளம் மைதானத்திற்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு வரும் கர்ப்பிணிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கூட்டத்தைத் தவிர்க்கும்படி ஏற்கெனவே தவெக தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் நடைபெறும் விஜய்யின் இந்தப் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
