உலக நாடுகளில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் முன்னாள் தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த புதிய வகை கொரோனா மிகவும் ஆபத்தானது. அதில் உள்ள அதிக நிமோனியா அதிக மரணத்தை ஏற்படுத்தும். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.