கோயில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோயில் ஊழியர் சதீஷ் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியான நிலையில் கோயில் இணை ஆணையர் பரணிதரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
