
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 22 வயதான ப்ரியானா என்ற பெண் பீட்சா டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் ஒன்றுக்கு பீட்சா டெலிவரி செய்ய சென்றபோது அங்கிருந்த பெண் 2 டாலரை டிப்ஸாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரியானா அந்த பெண்ணிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி உள்ளார்.
சுமார் 14 முறை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.