தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் – 2 பேர்
ஆங்கிலம் – 15 பேர்
கணிதம்- 690 பேர்

இயற்பியல் – 812 பேர்

வேதியியல் – 3,909 பேர்
உயிரியல் – 1,494 பேர்
தாவரவியல் – 340 பேர்
விலங்கியல் – 154 பேர்
கணினி அறிவியல் – 4,618 பேர்