தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால் இன்னும் சற்று நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அதன் பின்னர் புயலாக மாறும். இதன் காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் எனவும் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.