
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் மொத்தமா ஆயிரமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவி தொகையாக ஓராண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் இளநிலை படிப்பு வரை வழங்கப்படும்.
செப்டம்பர் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டு பிளஸ் ஒன் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ஐம்பது ரூபாயை சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.