மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரில் வசித்து வந்தவர் தான் பிரவீன் குமார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பிரவீன் குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக நண்பர் செல்லவேலு என்பவருடன் காரில் சென்றுள்ளார். இதையடுத்து பிரவீன் குமார் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கொழிஞ்சாம்பாறையில் சென்றபோது அவ்வழியாக வந்த அரசு பஸ் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பிரவீன் குமார், செல்லவேலு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் பிரவீன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது செல்லவேலு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர்.