ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து இவர் பிரபுதேவா நடிப்பில் “பஹீரா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பல காரணங்களால் திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்தது.

கடந்த சில நாட்களுக்கு பஹீரா திரைப்படத்தை வரும் மார்ச் 3 ஆம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி உள்ள இப்படத்தில் பிரபு தேவாவை இதுவரையிலும் பார்க்காத ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புது அப்டேட்டை ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டு உள்ளார். அந்த வகையில் பஹீரா படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மார்ச் 25-ஆம் தேதி (நாளை) வெளியாகும் என அறிவித்துள்ளார்.