அஜித்தின் ‘ஏகே 62’ படம் குறித்து ஏராளமான தகவல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வந்தாலும், இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராததால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக எச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணி இணைந்தனர். வங்கி கொள்ளையை மையமாக வைத்து வெளியான இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 250 கோடிக்கு மேல் வருமானம்  பெற்று தந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்தப்படத்தை லைகா தயாரிப்பில், அனிருத் இசையமைக்க, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிறு பிரச்சனையின் காரணமாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பூஜை தற்போது நடந்து முடிந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரையில்  ‘ஏகே 62’ படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இந்நிலையில்  விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் அறிவிப்பு டைட்டிலுடன் வெளியானதை போன்று  இந்தப்படத்தின் அறிவிப்பும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.