கேரளாவில் பிரபல Food Vlogger ராகுல் என் குட்டி தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். கொச்சியை சேர்ந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Eat Kochi Eat பக்கம் மூலம் உணவு பிரியர்களுக்கு பரிச்சயமான நபராக இருந்து வந்தார். இறுதியாக கடந்த புதன்கிழமை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில் இவரது மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.