எமி விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பிளேக் காலமானார். 1930 களின் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிளேக் அதன் பிறகு தொடர்ந்து 1990 இறுதிவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எண்ணற்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 70களில் வெளியான பரோடா தொடரில் நடித்து எம்மி விருதையும் வென்றார். 2001 ஆம் வருடம் தனது மனைவியை சுட்டுக் கொன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.