நேபாளத்தில் உள்ள ரவுதஹத் மாவட்டத்தில் குஜாரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் நர்ஷாத் மன்சூரி என்ற இளைஞர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பது தெரிய வந்தது. இந்த பாட்டிலை 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வாலிபரின் மலக்குடல் வழியாக வலுக்கட்டாயமாக வோட்கா பாட்டில் செலுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வாலிபரின் உடல்நலம் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நர்ஷாத் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் போது அவர்கள் நஷாத்தின் மலக்குடல் வழியாக பாட்டிலை கட்டாயமாக வயிற்றுக்குள் செலுத்தி இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நர்ஷாத்தின் மற்ற நண்பர்களையும் வலைபேசி தேடி வருகிறார்கள்.