பிரபல ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் கோல் கீப்பர் மிகுவல் ஏஞ்சல் காலமானார். முன்னாள் கோல் கீப்பர் மிகுவல் ஏஞ்சல் கோன்சாலஸ் தனது 76வது வயதில் காலமானதாக ரியல் மாட்ரிட் நேற்று தெரிவித்தது. 1947-இல் வடமேற்கு ஸ்பெயினின் நகரமான Ourense இல் பிறந்த மிகுவல் ஏஞ்சல், 1968 மற்றும் 1986-க்கு இடையில் 346 போட்டிகளில் பங்கேற்று எட்டு லா லிகா பட்டங்கள், இரண்டு UEFA கோப்பைகள் மற்றும் ஐந்து கோபா டெல் ரே பட்டங்களை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு ரியல் மாட்ரிட் அணி மட்டுமல்லாது பல்வேறு கால்பந்து அணிகளின் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.