சக்தே இந்தியா படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் ரியோ கபாடியா இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 66. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். ரியோ கபாடியா சக்தே இந்தியா மட்டுமல்லாது, ஹாப்பி நியூ இயர், தில் சாத்தா ஹை உள்ளிட்ட வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மரியா என்ற மனைவியும், ஃபாரா என்ற மகளும் உள்ளனர். இவரது மறைவிற்கு பாலிவுட் திரைப்பட நடிகர், நடிகைகள் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.