நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா  – நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்து பெற்ற நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணமகள் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.