ட்விட்டரில் நடிகர் விஜய் ரசிகர் ஒருவர் “தளபதி 68” குறித்து அப்டேட் கேட்டுள்ளார். இதற்கு ‘விரைவில்’ என பதில் தெரிவித்து இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இதற்கு பதில் அளித்துள்ளார். தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.