தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரீச்சை பெற்ற ஹன்சிகா மோத்வானி, 2022-ம் ஆண்டு தொழில் அதிபர் சோஹைல் கட்டாரியாவை காதலித்து ஜெய்ப்பூரில் மிகச் சிறப்பாக திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப நாட்களாகவே இருவரிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

தற்போது, ஹன்சிகா தனது கணவரின் வீட்டிலிருந்து வெளியேறி, மும்பையில் உள்ள தாயுடன் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் சோஹைலின் குடும்பத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இந்த பிரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஹன்சிகா விரைவில் விவாகரத்தை நாடப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவொரு பொது அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், சோஹைல் கட்டாரியா தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது. “ஹன்சிகாவுடன் பிரிவு அல்லது மனமுறிவு எனக் கூறப்படும் வதந்திகள் அனைத்தும் தவறானவை. எங்களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை” என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், இந்த விவகாரத்தின் உண்மை நிலை குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.