இந்தியாவின் பணக்கார நடிகர் ஷாருக்கான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்தியாவின் பணக்கார நடிகையாக விளங்குபவர் ஜூஹி சாவ்லா என்பது பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கலாம். 1984-ம் ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டத்தை வென்ற ஜூஹி சாவ்லா, பின்னர் பாலிவுட் திரையுலகில் பிரவேசித்து, ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பாபுலர் ஹீரோயினாக ஜொலித்தார்.
2010-ம் ஆண்டுக்கு பிறகு, நாயகி ரோல்கள் குறைந்து, குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்தாலும், ஜூஹி சாவ்லா தற்போது இந்தியாவின் மிகவும் பணக்கார நடிகையாக இருக்கிறார். இதற்கான முக்கிய காரணம், சினிமாவைத் தவிர தொழில்துறைகளிலும் அவர் மேற்கொண்ட முதலீடுகள்தான். ஷாருக்கானின் ‘Red Chillies Entertainment’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராகவும், IPL கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-இல் ரூ.620 கோடி மதிப்பில் முதலீடு செய்திருக்கிறார்.
இதிலேயே முடிவல்ல. தனது சொந்த முதலீட்டுத் திட்டங்கள், விளம்பர ஒப்பந்தங்கள், பண்ணை வீடுகள், வர்த்தக நிலங்கள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவற்றில் ஈடுபட்டதால், 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்கெடுப்பின்படி ஜூஹி சாவ்லாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4,600 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு துறைகளில் தனது நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவர் பணக்கார நடிகையாக வலம் வருவது திரையுலக மக்களுக்கு பெரும் பிரேரணையாக அமைந்துள்ளது.
