பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதால் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து லக்கி பாஸ் இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து சூர்யா தனது 46வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

மமீதா பைஜூ  இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவின் 46-வது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று சூர்யா தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அயனாவரத்தில் உள்ள மருத்துவனை ஒன்றில் 10 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் அணிவித்து, பேபி கிட் வழங்கியுள்ளனர்.