பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்குத் திரை உலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஸ்பை ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘வார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை பிரபல இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அதிரடி சண்டைக் காட்சிகளும், உலகத் தரமான ஸ்பை ஸெக்வென்ஸ்களும் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிதும் உயர்த்தியுள்ளது.

“>

 

படத்தில் கியாரா அத்வானி முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி இல்லாமல், செம்ம அதிரடி தோற்றத்துடன் காட்சிகளில் பங்களித்து இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ஹிருத்திக் ரோஷனின் ‘யாரி’ யூனிவர்ஸில் மிக முக்கியமான அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது.