பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் உடல் நலக்குறைவால் காலமானார். சர்பரோஸ், மேலா, ஆபிசர் உள்ளிட்டா திரைப்படங்களிலும் சிஐடி என்ற டிவி தொடரிலும் நடித்த பிரபலமானவர். இந்த நிலையில் திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு இவருக்கு செயற்கை சுவாச உதவியுடன் கண்காணிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.