பிரபல கன்னட இயக்குனர் எஸ் கே பகவான் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பகவான் தனது நண்பரான துரைராஜ் உடன் இணைந்து 55 படங்களை இயக்கியுள்ளார். இவர் பெரும்பாலும் ராஜ்குமாரை ஹீரோவாக வைத்தே படங்களை இயக்கியுள்ளார். அவரின் மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார்.