பிரின்ஸ் திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் டைரக்டு செய்யும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மிஷ்கின், சுனில் போன்றோர் வில்லன்களாக நடிக்கும் இந்த படத்தில் சரிதா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகும் மாவீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மாவீரன் படத்தை பக்ரீத் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவுள்ளது.