பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்து உள்ளார். இவர் இப்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் ஆகிய முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் கள்வன், டியர், அடியே உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக இந்தியாவின் பிரபல இயக்குனருடன் இணைய இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் “ஒரு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க உள்ளேன். அவர் ஒரு சர்வதேச இயக்குனர் ஆவார். அவர் படத்தில் நான் நடிக்கும் அறிவிப்பை அவரே வெளியிடுவார்” என்று சஸ்பென்ஸ் வைத்து உள்ளார்.