பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஆளும் கட்சி ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்ஜேடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது பதிவில், இன்று கயாவில் பொய்கள் மற்றும் பொய்யான வாக்குறுதிகளின் கடை திறக்கப்படும். எலும்பு இல்லாத நாக்கை கொண்ட பிரதமர் பொய்களின் இமயமலையை உருவாக்குவார். ஆனால் பீகார் மக்கள் அவரது பொய் மலைகளை அழிப்பார்கள் என பதிவிட்டார். தேஜஸ்வின் மீது மகாராஷ்டிரா எம்எல்ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் சோசியல் மீடியாவில் தேஜஸ்வி யாதவ் பதிவை பகிர்ந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டார். அந்த புகாரின் பேரில் கட்சிரோலி மாவட்ட காவல்துறையினர் தேஜாஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தேஜஸ்வி மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையே தேஜஸ்வி தனது மற்றொரு எக்ஸ் பதிவில் பிரதமர் மோடியை கேலி செய்யும் விதமாக “நேற்று மோடி திறந்து வைத்த பாலம் மறுநாளே இடிந்து விழும். ரிப்பன் வெட்டுவதோடு, பொது நலன் கருதி பாலம் இடிந்து விழும் என்று பாலத்தின் இருபுறமும் எச்சரிக்கை பலகையை நிறுவ வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.