2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்  அதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை டிடிவி தினகரன் உறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 27ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடியை டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.