பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 50 ஆண்டுகளாக நாட்டின் மிக பெரிய தலைவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.  இதனால் இவர்களின் சக்தி என்ன என்பது எனக்கு தெரியும். அதை நான் அனுபவித்து இருக்கிறேன். நான் எந்த ஒரு பணியை செய்தாலும் அதைப்பற்றிய விமர்சனம் 24 மணி நேரத்தில் அவர்களிடம் இருந்து வந்து சேர்ந்து விடும்.

நாடு முழுவதும் பயணம் செய்து இருக்கிறார்,  வயதான போதும் இவ்வளவு யாத்திரை அனுபவங்கள் மூலம் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.  ஏழை எளியவர்களுக்கும் இதுவரை வளங்களே  எதுவும் பெறாத ஏழை எளியவர்களுக்கு பணி செய்யும் வாழ்க்கை ஒரு அனுபவமாக இருக்கும்,  உற்சாகமாக இருக்கும்.

.. நம்முடைய நாட்டிற்கு அவருடைய ஆசிர்வாதத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்… கடந்த 10 ஆண்டுகளில் நாம் வளர்ச்சி அடைந்திருக்கின்ற வேகம் மிகவும் ஆச்சரியமானது. இதை நான் சொல்லவில்லை,  உலகமே சொல்கிறது.  பல விஷயங்களில் நாம் சிகரத்தை அடைந்திருக்கின்றோம்,  இது ஒவ்வொரு பாரத வாசிக்கும் மகிழ்ச்சியை தரும். ஆனால் நம்முடைய லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைவது.  இப்போது நாடு சிறிய சிறிய கனவுகளை எல்லாம் காண்பதில்லை, பெரிய கனவாக காண்கிறது.

நம்முடைய கனவுகளும் பெரியவையாக இருக்கும், இலக்குகளும் பெரியவையாக இருக்கும். இது நம்முடைய கனவும்  கூட… நம்முடைய இலக்கும் கூட…. நாம் பாரதத்தை வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற்ற வேண்டும்.  இதற்கு அடுத்த ஆண்டுகளில் மிகப்பெரிய அடிப்படையில் நாம் நிறுவ வேண்டும்.  வருகின்ற ஐந்து ஆண்டுகளில் இன்னும் வேகமாக பாரதம் பணியாற்ற வேண்டும்.  வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாம் மிகப்பெரிய தாவல் செய்ய வேண்டும்  எல்லா இலக்குகளையும் அடைவதற்கு முக்கியமான முதல் படி ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி வளமோடு திரும்பி வரவேண்டும் என தெரிவித்தார்.