பாஜக தேசிய பொதுக்குழு கூட்டம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது எதிர்க்கட்சிகள் கூட என்டிஏ ஆட்சி அடுத்த தேர்தலில் 400 பேர் ஜெயித்து விடுவோம் என்று சொல்லிவிடுகிறார்கள். NDA 400  சீட்டுகள் ஜெயிக்க வேண்டும் என்றால்,  பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களை வென்றாக வேண்டும். என்னுடைய நண்பர்கள் தரப்பில் சொல்லுகிறார்கள்…  பெரிய பெரிய இலக்கை எல்லாம் அடைந்து விட்டீர்கள். இன்னும் ஏன் ஓடி,  ஆடி வேலை செய்கிறீர்கள் என்று ? 

எங்களுடைய 10 ஆணடு கால ஆட்சி காலத்தில் 25 கோடி ஏழை  மக்களை ஏழ்மை நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்திருப்பது  ஒரு சாதாரண விஷயம் அல்ல. இந்த முழு நாட்டிற்கும் தெரியும்… ஊழல்களில் இருந்தும்,  தீவிரவாத தாக்குதலில் இருந்தும் விடுதலை கிடைத்துள்ளது.  ஏழை – எளியவர்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டிருக்கிறது. நிறைய செய்திருக்கிறோம் என்று நினைப்பதற்கு நான் ஒரு பழைய கதையை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு கட்சித் தலைவர் என்னை சந்தித்தார். என்னுடைய இரண்டாவது ஆட்சி காலத்தில் அவர் என்னை சந்தித்தார். இந்த நாட்டில்  பிரதமராவது மிகப் பெரிய கடினமான காரியம். நீங்கள பிரதமராகி விட்டீர்கள்.  கட்சிக்காக வேலை செய்திருக்கிறீர்கள்…. தங்களுக்காக வேலை செய்திருக்கிறீர்கள்…  இனிமே என்ன செய்ய வேண்டி இருக்கிறது என்று சொன்னார் ?

அவருடைய நோக்கம் அரசியல் வழியிலே சரி…  ஆனால் நம்முடைய நோக்கம் அதுவல்ல…  நாம் சத்ரபதி சிவாஜி அவர்களை மதிப்பவர்கள்.  அவர் மகாராஜாவாக ஆன பிறகு நாம் நாம் சத்ரபதி சிவாஜி ஆகிவிட்டோம்,  இனிமேல் செய்வதற்கு என்ன இருக்கிறது ? என்று நினைக்கவில்லை. அவரிடமிருந்து நாம் அனுபவம் பெற்றுக் கொண்டு சோர்வடையாமல் வேலை செய்ய வேண்டும் என பேசினார்.