இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

  • பிப்ரவரி 4: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 10: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 11: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 14: பசந்த பஞ்சமி காரணமாக திரிபுரா, ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 15: Lui-Ngai-Ni காரணமாக மணிப்பூரின் வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 18: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 19: சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 20: மாநில தினம் காரணமாக மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
  • பிப்ரவரி 24: இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 25: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை