விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் தற்போது ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றம் இருக்காது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பான்மையான மக்களால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.