தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ திரைப்படங்களில் நடித்திருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். அதோடு தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிறகு மீண்டும் தேவ் என்ற மற்றொரு திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்திருக்கிறார் ரகுல் பிரீத்சிங். அத்துடன் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள அவர், கமல்ஹாசனுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நீலம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த பூப்போட்ட பிகினி உடையை தேர்வு செய்த அவர், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட உறைபனி பகுதியிலுள்ள நீரில் மூழ்கி அப்படியே எழுந்து உள்ளார். இதுகுறித்த வீடியோவை ரகுல் பிரீத்சிங் தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)