ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற செனாப் பாலத்தில் நடந்த துயரமான நிகழ்வு ஒன்று ஒட்டுமொத்த மக்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 5 அன்று, பாயல் தேவி (20) என்ற இளம் பெண் திடீரென ஆற்றில் குதித்து விபரீத முடிவெடுத்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் ஆவேசமாகப் பாய்ந்தோடும் செனாப் நதியின் கொந்தளிப்பான அலைகளில் இளம்பெண் அடித்துச் செல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதிலேயே வளமான எதிர்காலத்தைக் கொண்ட மகளை ஆற்று நீரை அள்ளிச் சென்ற இந்தச் செய்தி அப்பகுதி மக்களின் நெஞ்சைப் பிழிந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
கொந்தளித்து ஓடும் ஆற்றில் மாயமான பாயல் தேவியைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தேடுதல் பணியில் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள போதிலும், இரவும் பகலும் பாராமல் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடுமையான பனிப்பாறை நீரோட்டமும் ஆக்ரோஷமான அலைகளும் சூழந்துள்ள செனாப் நதியின் சீற்றம் டோடா மாவட்ட மக்களை நடுங்க வைத்துள்ளது.
5 सितम्बर 2026 को Jammu Kashmir के शेवा पुल पर यह बेहद दर्दनाक हादसा हुआ।
20 साल की युवा पायल देवी अचानक Chenab River में छलांग लागा दिया!
एक होनहार बेटी का इस तरह लहरों के बीच खो जाना हर दिल को गहराई से चीर रहा है।
प्रशासन, स्थानीय Police और Rescue Team दिन-रात एक करके इस… pic.twitter.com/1gJQulzvp0
— Afjal Raj Guru (@afjalrajguru) September 6, 2026
“>
இளம் உயிரின் இந்த அகால மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி, அந்தப் பகுதி முழுவதும் உள்ள அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆற்றில் மாயமான பெண்ணைக் கண்டெடுக்கும் முயற்சியில் மீட்புப் படையினரின் தீவிரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
