சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகும் சூழ்நிலையில், தற்போது இரண்டு தலை கொண்ட மலைப்பாம்பு காட்டில் ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து, அது உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டதா என கேட்கிறார்கள்.
28 வினாடிகள் ஓடும் இந்தக் காணொளியில், ஒரு மலைப்பாம்பு மெதுவாக தரையில் செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதில் பாம்பின் உடல் சாதாரணமாக இருந்தாலும், அதற்கு இரண்டு தலைகள் ஒரே பக்கத்தில் இணைந்திருப்பது போன்ற அபூர்வ காட்சி இடம்பெற்றுள்ளது. இரு தலைகளும் ஒரே உடலில் இணைந்து இயங்கும் இந்த மர்மப் பாம்பு மக்கள் மத்தியில் வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
कुदरत का करिश्मा देखें।
अभी तक हमलोग बिना पूंछ वाला सांप को दो मुंह वाला सांप समझते थे । या बताया जाता था।
लेकिन इस सांप को देखे एक ही तरफ़ दोनों मुंह है।
इस सांप का नाम पाइथन (two-headed python) है,
जो मूल रूप से मध्य और पश्चिमी अफ्रीका में पाया जाता है, pic.twitter.com/4judqqWzHh
— Jamil Ansari (@jamil2832) October 3, 2025
இதுபற்றி நிபுணர்கள் தெரிவிக்கின்றதாவது, பாம்புகளில் “பைசெபாலி (Bicephaly)” எனப்படும் இந்த இரு தலைகள் கொண்ட நிலை ஒரு அரிய உயிரியல் குறைபாடாகும். இதில், ஒரு பாம்பின் உடலில் இரண்டு தலைகள் உருவாகின்றன. இவ்வாறான உயிரினங்கள் பெரும்பாலும் இயற்கையில் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீடியோ சமூகவலைதளமான எக்சில் பகிரப்பட்டுள்ளது. அவர் “இது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு தலை மலைப்பாம்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ 13,000-க்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலரும் தங்களது வியப்பையும் சந்தேகத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
