காட்டில் சில சிங்கங்கள் இணைந்து ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ‘காட்டின் ராஜா’ என அழைக்கப்படும் சிங்கங்கள், தங்கள் வலிமை, வீரியம், திட்டமிடும் திறன் ஆகியவற்றால் இப்பெயரைப் பெற்றுள்ளன. அவற்றைப் பார்த்தவுடன் பல விலங்குகள் ஓடி ஒளிந்து விடுகின்றன. ஆனால் வேட்டையின் போது, ஒரு விலங்கு கூட அவற்றிடமிருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில், @AmazingSights என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட 26 வினாடிகள் கொண்ட காணொளி, இத்தகைய வேட்டையின் ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வை பதிவு செய்கிறது. வீடியோவில், ஒரு பெரிய ஒட்டகச்சிவிங்கியை பல சிங்கங்கள் சேர்ந்து வேட்டையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
— Damn Nature You Scary (@AmazingSights) October 4, 2025
முதலில், ஒட்டகச்சிவிங்கி தப்பிக்க முயற்சிக்கிறது. அதன் நீளமான கால்களையும், சுறுசுறுப்பையும் பயன்படுத்தி ஓடுகிறது. ஆனால் ஒருசில நொடிகளில், ஒரு சிங்கம் ஒட்டகச்சிவிங்கியின் காலில் பாய்ந்தது. மற்றொன்று அதன் உடலுக்குள் பாய்ந்து பிடித்தது. இந்த தாக்குதலால், ஒட்டகச்சிவிங்கியின் வேகம் குறைந்து, அது தரையில் விழுந்தது.
மேலும் இந்த வீடியோ தற்போது 30,000-க்கும் மேற்பட்ட முறை பார்த்து, நூற்றுக்கணக்கானோர் கருத்துக்களையும், லைக்குகளையும் பகிர்ந்து வருகிறார்கள். ஒருவர் “இது காட்டின் உண்மையான விதி; ஒற்றுமையே பலம்,” எனக் கூறியுள்ளார். மற்றொருவர், “ஒட்டகச்சிவிங்கியின் நிலை வருத்தமளிக்கிறது, ஆனால் பெண் சிங்கங்களின் திட்டமிடும் திறன் வியக்க வைக்கிறது,” என்றுள்ளார்.
