சமூக வலைதளங்களில், விலங்குகளின் வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன. சில வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் வகையிலும், சில அதிர்ச்சியூட்டும் வகையிலும் இருக்கின்றன. இவ்வாறான அதிர்ச்சியூட்டும் ஒரு வீடியோ சமீபத்தில் பரவி, பலரை மிரள வைத்திருக்கிறது. உலகின் மிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான ‘ராஜ நாகம்’, உலகின் மிகப்பெரிய பல்லி எனப்படும்  உடும்பை வேட்டையாடும் காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த காணொளி, இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான பயனர்கள் கருத்துகளை பதிவு செய்து, இதை பரப்பி வருகின்றனர்.

 

 

வீடியோவில், பாம்பிடமிருந்து உடும்பு  தப்பிக்க முயற்சிக்கிறது. ஆனால், மின்னல் வேகத்தில் நகரும் ராஜ நாகம், அதன் மீது பாய்ந்து, தாக்குகிறது. இதனால் உடம்புக்கு தப்பிக்க எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. வெறும் சில நொடிகளில், உடும்பு பாம்பிடம் சிக்கி கொண்டது.

மேலும் பல பயனர்கள், “இயற்கையின் இந்த அதிசய வீடியோ என் முதுகுத்தண்டில் நடுக்கத்தை ஏற்படுத்தியது” எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “உடும்பு தப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று நினைத்தேன், ஆனால் ஒரு ராஜ நாகத்தை யாராலும் எதிர்க்க முடியாது” என்றும் ஒருவர் எழுதியுள்ளார்.